/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காரட்டை முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
/
காரட்டை முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED : ஆக 17, 2024 03:11 AM
வானூர்: காரட்டை முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.
வானுர் அடுத்த காரட்டை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்து வந்தது. நேற்று காலை 7 மணிக்கு சொர்ணாபிேஷகம் நடந்தது. தொடர்ச்சியாக 9:00 மணிக்கு திருத்தேர் திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவில் எதிரில் துவங்கிய இந்த தேர் ஊர்வலம் மாட வீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். இன்று 17 ம் தேதி மாலை அம்மன் வீதியுலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.