ADDED : ஜூன் 04, 2024 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் நகர தி.மு.க.,சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திண்டிவனம் செஞ்சி ரோடு, பழைய பதிவு அலுவலகம் அருகே, நடந்த விழாவிற்கு, நகர செயலாளர் கண்ணன் தலைமை தாங்கி, கருணாநிதி படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மாவட்ட வர்த்தகர் அணி துணைத் தலைவர் பிரகாஷ் மற்றும் 6 வது வார்டு நிர்வாகிகள் ஏழுமலை, அக்பர்பேக், அப்சர்பேக், முருகையன், ஜாபர், ஷாகித்பாஷா, காதர்நவாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.