/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீச்சு: போலீஸ் விசாரணை
/
மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீச்சு: போலீஸ் விசாரணை
மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீச்சு: போலீஸ் விசாரணை
மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீச்சு: போலீஸ் விசாரணை
ADDED : மார் 21, 2024 11:51 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டின் வெளியே மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேவியர் காலனி, பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜோசப் ராஜ், 40; பெயிண்டிங் கான்ட்ராக்டர். இவரது வீட்டின் அருகே அடிக்கடி, சிலர் மது போதையில் நின்று, பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
இது குறித்து ஜோசப் ராஜ் தட்டிக் கேட்டதால் அவரை சிலர் மிரட்டி சென்றுள்ளனர். இது குறித்து, விழுப்புரம் டவுன் போலீசிலும் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜோசப்ராஜ் குடும்பத்துடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 5:30 மணியளவில் வீட்டின் வெளியே திடீரென பாட்டில் உடையும் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தார்.
அப்போது, மர்ம நபர்கள் சிலர், காலி மது பாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி திரி வைத்து கொளுத்தி வீசியுள்ளது தெரியவந்தது. வீசும்போது தீ அணைந்ததால் வெடிக்காமல் பாட்டில் மட்டும் உடைந்து சிதறியுள்ளது.
தகவல் அறிந்து வந்த விழுப்புரம் டவுன் போலீசார் சிதறிக்கிடந்த பாட்டிலை பறிமுதல் செய்து, ஜோசப்ராஜிடம் விசாரித்தனர்.
இந்த பகுதியில், இரவு நேரத்தில் போதை ஆசாமிகள் சிலர் நின்று தொந்தரவு செய்வதாகவும், அதனை தட்டிக் கேட்டு, போலீசில் புகார் செய்ததால் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவித்ததன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

