/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிருபாபுரீஸ்வரர் கோவில் தேர் திருவிழா
/
கிருபாபுரீஸ்வரர் கோவில் தேர் திருவிழா
ADDED : மார் 25, 2024 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.
திருவெண்ணெய்நல்லுாரில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 8 நாள் திருவிழா நடைபெற்றது. தினமும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர்.

