/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாரத்தானில் வென்ற பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு
/
மாரத்தானில் வென்ற பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு
மாரத்தானில் வென்ற பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு
மாரத்தானில் வென்ற பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 09, 2024 06:04 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு சார்பில் நடந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற அரசு பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், செஞ்சுருள் சங்கம் சார்பில், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ரத்த தானம் செய்ய ஊக்குவிக்கும் விதமாகவும், மாரத்தான் போட்டியை நடத்தினர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட மைதானத்தில் நடந்த இப்போட்டியில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து, பள்ளி, கல்லுாரி, மாணவ, மாணவிகள் பங்கேற்றர்.
போட்டியில், முதல் 6 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இப்போட்டியில், விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக, அரசு பொறியியல் கல்லுாரி கணினி அறிவியல் 4ம் ஆண்டு மாணவர் பூவரசன் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், திருநாவுக்கரசு 4ம் இடத்தையும், மேலும், பெண்கள் பிரிவில் 3ம் ஆண்டு மாணவி மதுமிதா 6ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை, கல்லுாரி முதல்வர் செந்தில், உடற்கல்வி இயக்குனர் தனபால் மற்றும் கல்லுாரி செஞ்சுருள் சங்க அமைப்பாளர் பழனி பாராட்டினர்.