/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஆக 31, 2024 03:18 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் 2024ம் ஆண்டு நீட்தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவ படிப்புக்கு தேர்வான குமார்ஸ் வெற்றி டுடோரியல் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழுப்புரத்தில் கடந்த 1988ம் ஆண்டு தொடங்கி நடந்து வரும், குமார்ஸ் வெற்றி டுடோரியலில் 2024ல் நடந்த நீட் தகுதி தேர்வுக்கு பயின்று, வெற்றி பெற்று, அரசு மருத்துவக்கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு தேர்வான மாணவர்களுக்கு குமார்ஸ் டுடோரியல் மையத்தில் பாராட்டு விழா நடந்தது.
தாளாளர்கள் கோதகுமார், செல்வகுமார் வரவேற்றனர். விசாலாட்சி பொன்முடி வாழ்த்தி பேசினார். தொடர்ந்து, மரகதம் மருத்துவமனை தலைவர் திலீபன், திண்டிவனம் அரசு கல்லுாரி முன்னாள் முதல்வர் குமரன், பல் மருத்துவர் ரமேஷ், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் ராஜேந்திரன், சண்முகம், அரசு கல்லுாரி வரலாற்று துறை தலைவர் கார்த்திகேயன், பரதன், சங்கர் கணேஷ் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், மருத்துவ படிப்புக்கு தேர்வான 11 மாணவர்களுக்கும், ஸ்டெதஸ்கோப் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும், மரகதம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் தியாகராஜன் நினைவாக முதலாமாண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
தொ.மு.ச., பொதுச்செயலாளர் சேகர், வழக்கறிஞர்கள் சுரேஷ், ராமலிங்கம், மோகன், சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் பட்டு ஆறுமுகம், முன்னாள் மாணவர்கள் சண்முகம், ஆறுமுகம், பழனிவேல் கல்வி நிறுவன தலைவர் ராஜேந்திரன், தோகைப்பாடி தலைவர் பிரசன்னா, பழக்கடை பூபாலன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
டுடோரியல் பயிற்சி மைய மேலாளர் சரவணன் நன்றி கூறினார்.