நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த சித்தாத்துார் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் குமார சஷ்டியில் கம்பம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவையொட்டி, நேற்று பகல் உற்சவ சுவாமிகள் வீதியுலா நடந்தது. வீரவாகு தேவர்கள் ஊர்வலம் நடந்தது.
திருவாசக முற்றோதல் குழுவினர் பகல் உற்சவத்தில் பஜனைப் பாடல் பாடினர். மாலை 5:00 மணிக்கு கம்பம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இரவு வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் சுவாமி வீதியுலா நடந்தது. பின், சூரசம்ஹாரம் நடந்தது.
சித்தாத்துார், ஆலம்பாடி, கண்டாச்சிபுரம் பகுதி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.