/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிருஷ்ணர் கோவிலில் கும்பாபிேஷக விழா
/
கிருஷ்ணர் கோவிலில் கும்பாபிேஷக விழா
ADDED : செப் 09, 2024 05:56 AM

விழுப்புரம்: விழுப்புரம், கிருஷ்ணா நகர் கோகுல கிருஷ்ணர் கோவில் கும்பாபிேஷக விழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 6ம் தேதி மாலை முதல் கால பூர்ணஹூதி, சாற்று மறையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை மகா சாந்தி திருமஞ்சனம் நடந்தது.
நேற்று அதிகாலை யாத்ரா தானமும், காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 8:30 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.
திருக்கோவிலுார் மடாதிபதி தேகளீச ராமானுஜாச்சாரியார், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் ஆசியுரை வழங்கினர்.
திருவதிகை ஸ்ரீராமன் பட்டாச்சாரியார், விகனசன் பட்டர், நம்மாழ்வார் வைணவ சபை பஜனை தலைவர் திரிவிக்கிரம ராமானுஜ தாசன், சபை செயலாளர் குமார் முன்னிலை வகித்தனர்.
விழாவில், சூரியா கல்விக் குழும தாளாளர் விசாலாட்சி பொன்முடி, தி.மு.க., மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் ஜனகராஜ்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், காங்., நகர தலைவர் செல்வராஜ், அரசு வழக்கறிஞர் நாகராஜன், அடையார் ஆனந்தபவன் ராஜா, வி.ஆர்.பி.பள்ளி தாளாளர் சோழன், முன்னாள் அரசு வழக்கறிஞர் வேலவன், இளங்கோவன். பாலாஜி டிஜிட்டல் சீனுவாசன், கண்ணன் பேட்டரி மாயவீரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழு தலைவர் ராஜாமணி, ஜெயலட்சுமி மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.