/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கீழ்மாம்பட்டு செல்வவிநாயகர் கோவில் 16ம் தேதி கும்பாபிஷேகம்
/
கீழ்மாம்பட்டு செல்வவிநாயகர் கோவில் 16ம் தேதி கும்பாபிஷேகம்
கீழ்மாம்பட்டு செல்வவிநாயகர் கோவில் 16ம் தேதி கும்பாபிஷேகம்
கீழ்மாம்பட்டு செல்வவிநாயகர் கோவில் 16ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : செப் 13, 2024 07:36 AM
செஞ்சி: கீழ்மாம்பட்டு செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா 16ஆம் தேதி நடக்கிறது.
செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு செல்வவிநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள், அம்மச்சார் அம்மன் கோவில் ஜீரணோத்தாரன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வரும் 16ஆம் நடக்கிறது.
இதை முன்னிட்டு நாளை (13ஆம் தேதி) காலை 6:00 மணிக்கு தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தனபூஜை ,கோ பூஜையும், மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
14ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, ஆச்சார்யவர்ணம், கும்ப அலங்காரம், பூர்ணாஹுதி, முதல் கால யாக சாலை பூஜையும், 15 ஆம் தேதி காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும்.
16ஆம் தேதி காலை 4.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகளும், 7.45 மணிக்கு மஹாபூர்ணாஹுதியும், 9.00 மணிக்கு யாத்ராதானம், கடம்புறப்பாடும், 9.45 மணிக்கு அம்மச்சார் அம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் மூர்த்தி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

