/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிடாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
/
பிடாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : மார் 08, 2025 05:26 AM
செஞ்சி : செஞ்சி அடுத்த கடுகப்பட்டு பிடாரி அம்மன் கருடாழ்வார், ராதா ருக்மணி சமேத பெருமாள் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நாளை 9ம் தேதி நடைபெற உள்ளது.
விழாவையொட்டி, இன்று 8ம் தேதி காலை 10:30 மணிக்கு கிராம தேவதை பிரார்த்தனை, கணபதி, லஷ்மி மற்றும் நவகிரக ஹோமம் நடக்கிறது.
மாலை 5:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
நாளை 9ம் தேதி காலை 7:00 மணிக்கு கோபூஜை, கணபதி பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:45 மணிக்கு ராதா ருக்மணி சமேத பெருமாள், கருடாழ்வருக்கும், 10:15 மணிக்கு பிடாரி அம்மனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.