/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாய நிலத்தில் மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
/
விவசாய நிலத்தில் மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
ADDED : ஆக 12, 2024 04:40 AM
திண்டிவனம்: திண்டிவனம் அருகே கரும்பு வெட்டும் தொழிலாளி விவசாய நிலத்தில் மயங்கி விழுந்து, இறந்தார்.
புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த சோரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாவப்பன், 65; கரும்பு வெட்டும் தொழிலாளி. திண்டிவனம் அடுத்த மேல்பேரடிக்குப்பத்தை சேர்ந்த பாரதி என்பவரின் வயலில் தங்கி கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருடன் 13 பேர் தங்கியிருந்தனர்.
நேற்று அதிகாலை 5:00 மணியளவில் அதே பகுதியில், காலனி சுடுகாடு அருகே உள்ள நிலத்தின் வழியாக நாவப்பன் வரப்பில் நடந்து சென்றுள்ளார். அப்போது மயங்கி விழுந்தார். திண்டிவனம் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த தொடர் மழையால், வயலில் தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்தவர், மூச்சுத்திணறி இறந்துள்ளார்.
புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.