/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரி கால்வாயில் விழுந்து கூலித் தொழிலாளி பலி
/
ஏரி கால்வாயில் விழுந்து கூலித் தொழிலாளி பலி
ADDED : செப் 08, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அடுத்த மொடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் அய்யப்பன், 33; கூலித் தொழிலாளி.
நேற்று முன்தினம் இரவு மொடையூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேடை நாடகம் நடந்தது. அய்யப்பன் நாடகத்தை பார்த்துவிட்டு அதிகாலை 4:00 மணியளவில் அங்குள்ள ஏரி கால்வாய் தடுப்பு சுவர் மீது படுத்து துாங்கினார். துாக்க கலக்கத்தில் தவறி கால்வாயில் விழுந்தவர், நீரில் மூழ்கி இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.