/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டோல் கேட்கள் அகற்றப்படும் லட்சுமணன் எம்.எல்.ஏ., உறுதி
/
டோல் கேட்கள் அகற்றப்படும் லட்சுமணன் எம்.எல்.ஏ., உறுதி
டோல் கேட்கள் அகற்றப்படும் லட்சுமணன் எம்.எல்.ஏ., உறுதி
டோல் கேட்கள் அகற்றப்படும் லட்சுமணன் எம்.எல்.ஏ., உறுதி
ADDED : ஏப் 14, 2024 05:41 AM

விழுப்புரம்: விழுப்புரம் நகரில், வி.சி.க., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, லட்சுமணன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரித்தார்.
விழுப்புரம் நகராட்சி 37வது வார்டு, ராகவன்பேட்டை பகுதியில், தி.மு.க., மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பிரசாரத்தின்போது, பேசுகையில்,'முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி, இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அனைத்துமே அகற்றப்படும்.
அனைத்து பெண்களுக்கும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், தமிழகத்தில் திராவிட மாடல் மாதிரி அரசு எடுத்துள்ள முயற்சிகளை, இந்தியா முழுவதும் விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் வி.சி.கட்சி வேட்பாளருக்கு பானை சின்னத்தில் ஓட்டு போட வேண்டும்' என்றார்.
விழுப்புரம் நகர தி.மு.க., செயலாளர் சர்க்கரை, நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் குமரன், வி.சி., மாவட்ட செயலாளர் பெரியார், துணைச் செயலாளர் சரவணன், தி.மு.க., நகர துணைச் செயலாளர் புருஷோத்தமன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், வார்டு செயலாளர் மணவாளன், அவைத் தலைவர் பாவாடை, பிரதிநிதி முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

