/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லட்சுமி நரசிம்மர் கோவில் மகா கும்பாபிேஷகம்
/
லட்சுமி நரசிம்மர் கோவில் மகா கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 10, 2024 01:30 AM

உளுந்துார்பேட்டை : பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிேஷகம் நேற்று வெகு விமர்சியாக நடந்தது.
உளுந்துார்பேட்டை அடுத்த பரிக்கல் கிராமத்தில் 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 8:00 மணிக்கு யாக குண்டத்தில் வைக்கப்பட்டிருந்த கும்ப கலசங்களை வேத மந்திரங்கள் முழங்க கோபுரத்திற்கு எடுத்துச் சென்று புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. கலெக்டர்கள் கள்ளக்குறிச்சி ஷ்ரவன்குமார், விழுப்புரம் பழனி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்.
எஸ்.பி., சமய்சிங் மீனா மேற்பார்வையில், டி.எஸ்.பி., மகேஷ் தலைமையில் ௫௦௦க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.