/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு ஆர்ப்பாட்டம்
/
நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 23, 2024 07:13 AM

விழுப்புரம்: தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் அரிபிரசாத் வரவேற்றார். இணை செயலாளர் ராம்குமார், கோட்ட தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். செயலாளர் திருநாவுக்கரசு கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.
தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை தரம் உயர்த்துவதற்கான கோப்பின் மீது ஒப்புதல் வழங்க வேண்டும். நில அளவை பதிவேடுகள் துறையில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொருளாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.