ADDED : ஜூன் 20, 2024 08:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: தமிழகத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தினை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விக்கிரவாண்டி கோர்ட் முன், லாயர்ஸ் அசோசியேஷன்ஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தலைவர் வழக்கறிஞர் சங்கரன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தினை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர். செயலாளர் முருகன், முன்னாள் செயலாளர் வீரவேல் உட்பட வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.