ADDED : ஜூன் 16, 2024 10:34 PM

வானுார் : வானுார் நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியும், வானுார் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில் 'நியாய ஒளி' என்ற திட்டத்தின் கீழ் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை விருந்தினராக முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாஸ்கர் பங்கேற்றார்.
தொடர்ந்து, சட்ட அறிவை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு வழக்கறிஞர்களின் கடமை.
அதை செய்வதற்கு நாம் என்றென்றும் தயாராக இருக்க வேண்டும் என பேசினார்.
விழாவில் விழுப்புரம் மாவட்ட தலைமை நீதிபதி பூர்ணிமா, மாவட்ட அமர்வு நீதிபதி பாக்கியஜோதி, ஸ்ரீ வைகுண்டம் நீதிமன்ற சார்பு நீதிபதி நம்பிராஜன், புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி முதல்வர் சீனிவாசன், வானுார் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வரலட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.
விழாவில் வானுார் நீதிமன்றத்தில் பணிபுரியும் மூத்த வழக்கறிஞர்கள் கோதண்டம், தமிழரசன், முருகேசன், ஆறுமுகம், தேவகுமார், தட்சணாமூர்த்தி, ஜானகிராமன், சுரேஷ், தியாகராஜன், அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
வானுார் வழக்கறிஞர் சங்க நுாலகர் ஹரிகரன் நன்றி கூறினார்.