/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எம்.ஜி.ஆர்., அரசு கல்லுாரியில் சட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சி
/
எம்.ஜி.ஆர்., அரசு கல்லுாரியில் சட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சி
எம்.ஜி.ஆர்., அரசு கல்லுாரியில் சட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சி
எம்.ஜி.ஆர்., அரசு கல்லுாரியில் சட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ADDED : ஜூலை 06, 2024 05:21 AM
விழுப்புரம்: விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் மாணவிகளுக்கான சட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் தாமோதரன் தலைமை தாங்கினார்.
வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் மாநிலச் செயலாளர் சுஜாதா கருணாகரன் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் உரிமையியல் சட்டங்கள் குறித்து பேசுகையில், ' பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் ஏராளமாக உள்ளன. பாதிக்கப்படும் பெண்கள், அது தொடர்பாக புகார் அளித்தால், உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் தங்களுக்கு நிகழும் பாதிப்புகள், பிரச்னைகள் குறித்து காவல் நிலையத்திலோ அல்லது இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பெண்களுக்கான சிறப்பு தொலைபேசி எண்கள் 181, 1091, 1930 குழந்தைகள் பாதுகாப்புக்கான 1098 போன்ற எண்களில் தொடர்புகொண்டு தங்கள் பிரச்சனைகள், தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் போன்றவற்றை தெரிவிக்கலாம்.
அதற்கான சட்டபூர்வ தீர்வும், ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது' என்றார்.
தொடர்ந்து வழக்கறிஞர் பரிதா ஞானமணி சிறப்புரையாற்றினார். பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர். ஆசிரியர் செல்வராணி நன்றி கூறினார்.