/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மொதல்ல கிராமத்துக்கு பஸ்சை விடுங்க... பொன்முடி பேச்சுக்கு பெண்கள் முணுமுணுப்பு

ADDED : மார் 25, 2024 05:22 AM
வானுார்: இலவச பஸ் திட்டத்தையே செயல்படுத்தாத பகுதியில் புதுச்சேரிக்கே சென்று வரலாம் என அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு பெண்கள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்தது.
விழுப்புரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணி வி.சி., கட்சி சார்பில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். இவரை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் நேற்று வானுாரில் நடந்தது.
அமைச்சர் பொன்முடி பங்கேற்று, வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், 'மகளிர் உரிமைத்தொகை, கல்லுாரி மாணவிகளுக்கு 1,000 ரூபாய், மகளிர்களுக்கு இலவச பஸ் போன்ற திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். வானுார் மற்றும் கோட்டக்குப்பத்தில் பஸ் ஏறினால், நீங்கள் புதுச்சேரிக்கே சென்று விடலாம்' என்றார்.
அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் சிலர், கிராமங்களுக்கே சரியாக பஸ் வருவது கிடையாது. இந்த பகுதியில் இலவச பஸ் திட்டமும் செயல்படுத்தவில்லை.
இதுல எங்க புதுச்சேரிக்கு போறது. கிராம பகுதியில என்ன நடக்குதுன்னு கூட தெரியாமேயே இருக்காரே. இவரு எந்த உலகத்துல இருக்காருன்னே தெரியலையே' என முணுமுணுத்தனர்.