ADDED : மார் 07, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் அருகில் புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் அடுத்த பெரமண்டூர் ரோட்டில் மயிலம் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வந்த பஜாஜ் ஸ்கூட்டியை நிறுத்தி சோதனை செய்தனர். புதுச்சேரியிலிருந்து 144 மது பாட்டில்களை பைக்கில் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில் வேலுார் மாவட்டம், சல்வன்பேட்டை, அம்மன் குட்டை ரோட்டை சேர்ந்த வெங்கடேசன், 30; என்பது தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், மது பாட்டில்கள் மற்றும் ஸ்கூட்டியை பறிமுதல் செய்தனர்.