/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தடுப்புக் காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
/
தடுப்புக் காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
ADDED : ஆக 21, 2024 06:39 AM

விழுப்புரம் : கோட்டக்குப்பம் அருகே சாராய வியாபாரியை போலீசார் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மரக்காணம் அடுத்த கரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் அய்யப்பன், 34; இவர், கடந்த ஜூலை 5ம் தேதி, பொம்மையார்பாளையம் பகுதியில் சாராய விற்பனை செய்த போது, கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர் மீது, கோட்டக்குப்பம் மதுவிலக்கு பிரிவில் சாராயம் விற்பனை, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பல வழக்குகள் உள்ளது.
இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., தீபக்சிவாச், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் பழனி அளித்த உத்தரவின் பேரில், நேற்று கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், அய்யப்பனை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை, கடலுார் மத்திய சிறைச்சாலை அதிகாரியிடம் வழங்கினர்.