/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் அரசு கல்லுாரியில் இலக்கிய மன்ற விழா
/
வானுார் அரசு கல்லுாரியில் இலக்கிய மன்ற விழா
ADDED : செப் 06, 2024 12:25 AM

வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ஆங்கிலத்துறை சார்பில் இலக்கிய மன்ற விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
துறைத் தலைவர் ராஜேஸ்வரி ஜெயராணி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, ஆசிரியர் தின வாழ்த்துகளைக் கூறி, மாணவர்கள் அறிவாற்றலில் சிறந்து விளங்க கல்லுாரியில் கொடுக்கப்படும் அனைத்து பயிற்சிகளையும், வாய்ப்புக்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
விழாவில், ரிஷி கேசவன், பிரேம் ஆனந்த் ஆகியோர் எழுதிய உச்ச செயல் திறனை அடைய வழிமுறைகள் என்ற புத்தகத்தை கல்லுாரி முதல்வர் வெளியிட, முதல் பிரிதியை, ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் காந்திமதி பெற்றுக்கொண்டார். உதவி பேராசிரியர் சின்னதுரை நன்றி கூறினார்.