/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வட்டார போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
வட்டார போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 10, 2024 05:16 AM
விழுப்புரம்: விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு வட்டார போக்குவரத்துத்துறை பணியாளர் ஒன்றிப்பு சார்பில், பதவி உயர்வு, காலிபணியிடங்களை நிரப்ப ணேவ்டும். அலகு பணியிட மாறுதல்கள் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, போக்குவரத்துத்துறை பணியாளர் ஒன்றிப்பு சரக செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். அரசு பணியாளர் சங்க மாநில இணை பொதுச்செயலாளர் சிவக்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில், போக்குவரத்துத்துறை பணியாளர் சங்கத்தினர், ஊராட்சி களப்பணியாளர் சங்கத்தினர் பங்கேற்றனர்.