/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லோக்சபா தேர்தல் பணி பார்வையாளர் ஆய்வு
/
லோக்சபா தேர்தல் பணி பார்வையாளர் ஆய்வு
ADDED : மார் 21, 2024 11:55 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் லோக்சபா தேர்தல் பணிகளை,  தேர்தல் செலவின பார்வையாளர் நேரில் பார்வையிட்டு, அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் (தனி) தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளராக சித்தரஞ்சன் தாங்கடா மஜ்ஹி தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் வேட்பு மனு தொடக்க பணிகளை பார்வையிட்ட அவர், பிறகு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி, தேர்தல் பணிகள் குறித்து எடுத்துரைத்தார். மாவட்டத்தில் தேர்தலுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் விபரம். தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் நன்னடத்தை விதிகள் பின்பற்றப்பட்டுள்ள விவரங்கள்.
பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களின் விபரங்கள். பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விபரம், பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, தேர்தல் பார்வையாளர், தேர்தல் கண்காணிப்பு பணிகள் குறித்து, தேர்தல் பணிக்கான அலுவலர்களிடம் விளக்கினார்.

