ADDED : மார் 28, 2024 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் நகர பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.
அதன் பேரில் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் நேற்று காலை 11:00 மணியளவில், இந்திராகாந்தி பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றார்.
அப்போது, திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியைச் சேர்ந்த சதீஷ், 40; ஏரிக்கரையை சேர்ந்த மதன், 32; ஆகிய இருவரும் ஒரு நெம்பர் லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. உடன் இரவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

