/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் புத்தக கண்காட்சியில் தாமரை பிரதர்ஸ் மீடியா அரங்கு
/
விழுப்புரம் புத்தக கண்காட்சியில் தாமரை பிரதர்ஸ் மீடியா அரங்கு
விழுப்புரம் புத்தக கண்காட்சியில் தாமரை பிரதர்ஸ் மீடியா அரங்கு
விழுப்புரம் புத்தக கண்காட்சியில் தாமரை பிரதர்ஸ் மீடியா அரங்கு
ADDED : மார் 05, 2025 05:33 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடபெறும் புத்தக கண்காட்சியில் தாமரை பிரதர்ஸ் மீடியா புத்தக அரங்கை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சித் திடலில், மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த 2ம் தேதி புத்தக கண்காட்சி துவங்கியது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 11 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில், 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், 58வது அரங்கில் 'தினமலர்' நாளிதழ் சார்பில், தாமரை பிரதர்ஸ் மீடியா புத்தக அரங்கு அமைந்துள்ளது.
இதனை ஏராளமான மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டு பயனடைந்தனர். இங்கு, 10 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது.