/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பராமரிப்பின்றி மினி குடிநீர் டேங்க்
/
பராமரிப்பின்றி மினி குடிநீர் டேங்க்
ADDED : ஜூன் 24, 2024 05:43 AM

விழுப்புரம், : விழுப்புரம் அருகே மினி குடிநீர் டேங்க் பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
விழுப்புரம் அடுத்த கோணங்கிப்பாளையம் கிராமத்தில், பாணாம்பட்டு - பண்ருட்டி நெடுஞ்சாலைக்குச் செல்லும் மெயின் ரோட்டில், சிறுமின் விசை குடிநீர் தொட்டி (மினி டேங்க்) அமைக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சியாக இருந்தபோது, கட்டப்பட்ட அந்த குடிநீர் டேங்க் தற்போது, பராமரிப்பின்றி உள்ளது.
இப்போதும், மோட்டார் மூலம் டேங்க்கிற்கு குடிநீர் ஏற்றபட்டு வரும் நிலையில், அதனை பயன்படுத்த முடியாத அளவிற்கு, அந்த டேங்கிலிருந்த குடிநீர் திறப்புக்கான டேப்புகள் இன்றி மூடப்பட்டுள்ளது.
மெயின்ரோடு வழியாக செல்வோர் மற்றும் அப்பகுதி மக்கள் குடிநீர் பிடிக்க முடியாத நிலை உள்ளது. டைல்ஸ்கள் போடப்பட்ட கீழ் தளமும் உடைந்து சேதமடைந்துள்ளது.
தற்போது மோட்டார் மூலம் குடிநீர் ஏற்றி, சிலர் ஆடு, மாடுகளுக்கு மட்டும் தண்ணீர் காட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர்.
இதனருகே உள்ள குடிநீர் கை பம்பும் பயன்பாட்டில் இல்லாமல் மண்ணில் புதைந்து வீணாகி கிடக்கிறது. அந்த பகுதிகள், விழுப்புரம் நகராட்சியில் இணைக்கப்பட்டதால், குடிநீர் டேங்க் போன்றவை பராமரிப்பின்றி கிடப்பதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். நல்ல நிலையில், குடிநீர் ஏற்றும் வசதியுடன் உள்ள அந்த மினி குடிநீர் டேங்க் கட்டமைப்பை புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.