/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கணவன், மனைவியைத் தாக்கிய நபர் கைது
/
கணவன், மனைவியைத் தாக்கிய நபர் கைது
ADDED : மே 07, 2024 05:35 AM
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே தம்பதியைத் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கண்ணாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 50; அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் நாகராஜ், 37; இருவருக்குமிடையே நகைசீட்டு தொலைந்து போனது தொடர்பாக முன்விரோதம்இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி இரவு 9:00 மணியளவில் செல்வராஜ் குடிபோதையில் நாகராஜ் வீட்டிற்கு சென்றுஅவர் இல்லாதபோது அவரை திட்டியுள்ளார். இதனையறிந்த நாகராஜ், செல்வராஜ் வீட்டிற்கு சென்று அங்கிருந்த இரும்பு கம்பியால் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகிய இருவரையும்சரமாரியாகதாக்கினார்.
இதுகுறித்துசெல்வராஜ் அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து நாகராஜை கைது செய்தனர்.