/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருமண புரோக்கரை தாக்கியவர் கைது
/
திருமண புரோக்கரை தாக்கியவர் கைது
ADDED : ஜூலை 17, 2024 12:51 AM
விழுப்புரம், : விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 69; திருமண புரோக்கர். இவர், கடந்த 12 ஆண்டிற்கு முன், வடவாம்பலத்தை சேர்ந்த சக்திவேல்,42; என்பவருக்கு, அரசமங்கலத்தைச் சேர்ந்த பெண்ணை மணம் முடித்து வைத்துள்ளார்.
திருமணம் ஆனது முதல் சக்திவேலுக்கும் அவரது மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால், விரக்தியில் இருந்த சக்திவேல், கடந்த 12ம் தேதி அரசமங்கலம் ரேஷன் கடை அருகே வந்த பெருமாளை மறித்து, பொருத்தமில்லாத பெண்ணைப் பார்த்து, திருமணம் செய்து வைத்ததாக கூறி, தாக்கியுள்ளார்.
இது குறித்து, பெருமாள் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து, நேற்று சக்திவேலை கைது செய்தனர்.