/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வைக்கோல் ஏற்றிய மினி லாரியில் 2,832 மதுபாட்டில் கடத்தியவர் கைது
/
வைக்கோல் ஏற்றிய மினி லாரியில் 2,832 மதுபாட்டில் கடத்தியவர் கைது
வைக்கோல் ஏற்றிய மினி லாரியில் 2,832 மதுபாட்டில் கடத்தியவர் கைது
வைக்கோல் ஏற்றிய மினி லாரியில் 2,832 மதுபாட்டில் கடத்தியவர் கைது
ADDED : ஏப் 04, 2024 12:30 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வைக்கோல் ஏற்றிய மினி லாரியில் பதுக்கி, 2,832 மது பாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்ஸ்பெக்டர்கள் மீனா, சின்னகாமணன், சப் இன்ஸ்பெக்டர் இனாயத்பாஷா தலைமையிலான குழுவினர், நேற்று அதிகாலை விழுப்புரம் அருகே செஞ்சி நெடுஞ்சாலையில், தென்னமாதேவி டோல்பிளாஸாவில், வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, வைக்கோல் கட்டுகள் ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த, லாரியில் வைக்கோல் கட்டுக்கு கீழே மறைத்து, 30க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் 2,832 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது.
டிரைவரிடம் விசாரித்ததில், விக்கிரவாண்டி தாலுகா விஷ்வரெட்டி பாளையத்தை சேர்ந்த பழனி மகன் சிவக்குமார்,45; புதுச்சேரியில் இருந்து செஞ்சி பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்தி செல்வது தெரிய வந்தது. செஞ்சி சேபேட்டை கிராமத்தை சேர்ந்த சுந்தர் மகன் ராஜேந்திரன், 40; என்பவருக்காக மது பாட்டில் கடத்திச் செல்வதாக கூறினார். இதனையடுத்து, விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், சிவக்குமாரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ராஜேந்திரனை தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் மற்றும் மினி லாரியின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

