/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி சாவு
/
கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி சாவு
ADDED : மார் 10, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வெள்ளிமேடுபேட்டை அருகே கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி இறந்தார்.
சென்னை, ஈக்காட்டுதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் முரளி, 52; இவரது உறவினர் இறந்ததால் துக்க நிகழ்ச்சிக்காக வெள்ளிமேடுபேட்டை அடுத்த அகூர் கிராமத்திற்கு வந்திருந்தார்.
இவர், நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலையத்தினர் முரளியின் சடலத்தை மீட்டனர்.
வெள்ளிமேடுபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.