/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காருடன் மாயமான நபர் 6 மாதத்திற்கு பின் கைது
/
காருடன் மாயமான நபர் 6 மாதத்திற்கு பின் கைது
ADDED : பிப் 28, 2025 05:38 AM

வானுார்: வானுார் அருகே காருடன் மாயமான நபரை போலீசார் கைது செய்தனர்.
வானுார் அடுத்த காசிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 30; இவரிடம் ஸ்விப்ட் டிசைர் கார் சொந்தமாக இருந்தது. இவரிடம், திண்டிவனம் அடுத்த சலவாதி கிராமத்தை சேர்ந்த சுரேஷ், 29; டிரைவராக வேலை செய்தார்.
இவர், கடந்தாண்டு ஜூன் மாதம், உறவினர் திருமணத்திற்கு செல்லவதாக கூறி காரை ஓட்டிச் சென்றார். அதன் பிறகு சுரேஷ் மாயமானார். மொபைல் போனில் தொடர்பு கொண்டும் சரிவர பதில் கூறவில்லை. இதுகுறித்து கடந்த மாதம் 2ம் தேதி சக்திவேல், ஆரோவில் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சுரேைஷ தேடி வந்தனர். இந்நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த சுரேைஷ நேற்று தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நண்பரிடம் காரை கொடுத்து மறைத்து வைத்திருந்ததும், அவசர தேவைக்கு மட்டும் பயன்படுத்தியதும் தெரிந்தது. உடன், போலீசார், சுரேைஷ கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.

