/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மரக்காணம் கழுவெளி ஏரியில் அரியவகை நாரைகள் தஞ்சம்
/
மரக்காணம் கழுவெளி ஏரியில் அரியவகை நாரைகள் தஞ்சம்
ADDED : ஆக 06, 2024 06:59 AM

மரக்காணம் : மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் கழுவெளி ஏரி மற்றும் பக்கிங்காம் கால்வாயில் ஆசியா கண்டத்தைச் சேர்ந்த அரியவகை வர்ணம் தீட்டிய நாரைகள் தஞ்சமடைந்துள்ளன.
மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் - ஆத்திக்குப்பம் கழுவெளி ஏரி 16 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த ஏரி, 10.50 கி.மீ., அகலமும், 12.80 கி.மீ., நீளமும் கொண்டது. 70 சதுர கி.மீ., நீர்பரப்பைக் கொண்டுள்ளது.
இந்த ஏரியில் உள்ள நன்னீர் பக்கிங்காம் கால்வாயில் உள்ள உப்பு நீரில் கலக்காமல் இருக்க 2 ஆண்டுகளுக்கு முன் 161 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் வண்டிப்பாளையம் - ஆத்திக்குப்பம் கழுவெளி ஏரி சதுப்பு நிலத்தை கொண்டதால் பல ஆண்டுகளாக இந்த ஏரிக்கு வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்த வண்ணம் உள்ளது.
இதனால் மாநில அரசு 10 ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் பறவைகள் சரணாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு நடத்தி விட்டு சென்றதுடன் பணி கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் சில நாட்களாக ஆசியா கண்டத்தைச் சேர்ந்த வர்ணம் பூசப்பட்ட நாரை குடும்பத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்த வண்ணம் உள்ளது.
இந்த நாரைகளின் வெப்பமண்டல ஆசியாவின் ஈரநிலங்களில், முக்கியமாக இந்திய துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும். இந்த நாரைகள் காலனித்துவ கூடுகள். அவை மரங்களில், பெரும்பாலும் தண்ணீருக்கு அருகில் பெரிய குச்சி கூடுகளை உருவாக்குகின்றன. இனப்பெருக்க காலம் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும்.
கடந்த சில நாட்களாக வண்டிப்பாளையம் கழுவெளி ஏரி மற்றும் பக்கிங்காம் கால்வாயில் வந்து தஞ்சமடைந்துள்ள இந்த நாரைகளை மர்ம நபர்கள், மீன் குஞ்சுகளின் கழுத்தில் உள்ள செவுள் பகுதியில் பியூரிடானை தடவி தண்ணீர் அருகிள் போடுகின்றனர். அந்த மீன்களை நாரைகள் சாப்பிட்டதும் மயக்கமடைந்ததும் எடுத்துச் செல்கின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து பறவைகளை பாதுகாக்க வேண்டும் என பறவைகள் இன ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.