
செஞ்சி: செஞ்சி பேரூராட்சியில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை துாய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் மே தின விழா நடந்தது.
விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சி துாய்மைப் பணி மேற்பார்வையாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் சங்க கொடியேற்றி தொழிலாளர்களுக்கு மே தின பரிசு, இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கினார். மா.கம்யூ., செஞ்சி வட்ட நிர்வாகி கோவிந்தசாமியின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, நகர செயலாளர் கார்த்திக், கவுன்சிலர்கள், சி.ஐ.டி.யூ., நகர தலைவர் ஜெயசீலன், செயலாளர் ஏழுமலை, துணைத் தலைவர் கஸ்பார், பொருளாளர் பரசுராமன், துணைச் செயலாளர்கள் சவுரிமுத்து, சசிகுமார் மாவட்ட நிர்வாகி சகாதேவன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர்.
வானுார்
புளிச்சப்பள்ளம் அடுத்த ஆரோபுட் ஐ.பி.பி.எல்., தனியார் கம்பெனியில், சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், 139வது மே தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கம்பெனி எதிரில், சங்க கொடியை, சங்க செயல் தலைவர் சிவக்குமார் ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில், சங்க நிர்வாகிகள் சிவராஜ், கண்ணன், ஏழுமலை, ராமதாஸ், செல்வராஜ், காத்தவராயன், சேகர், மூர்த்தி, சேகர், புதுச்சேரி கமிட்டி உறுப்பினர் தேவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.