/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மீன் மார்க்கெட்டில் தேங்கும் இறைச்சி கழிவு பொதுமக்கள் கடும் அவதி
/
மீன் மார்க்கெட்டில் தேங்கும் இறைச்சி கழிவு பொதுமக்கள் கடும் அவதி
மீன் மார்க்கெட்டில் தேங்கும் இறைச்சி கழிவு பொதுமக்கள் கடும் அவதி
மீன் மார்க்கெட்டில் தேங்கும் இறைச்சி கழிவு பொதுமக்கள் கடும் அவதி
ADDED : மே 16, 2024 11:03 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் நவீனமயமான மீன் மார்க்கெட்டில் இறைச்சி கழிவுகளை அகற்றாததால் அப்பகுதிபொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
விழுப்புரம் எம்.ஜி., ரோட்டில் மீன் மார்க்கெட் இயங்கியது. இங்குள்ள, மீன் வியாபாரிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாத சூழலில், நகராட்சி நிர்வாகம் மூலம் அனிச்சம்பாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் நவீனமயமான மீன் மார்க்கெட் கட்டப்பட்டு, சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.
இந்த மீன் மார்க்கெட் துவங்கிய சில மாதங்களில் அங்குள்ள மீன் வியாபாரிகள், வியாபாரம் முடிந்தவுடன் மீன் கழிவுகளை பொதுமக்கள் வசிக்காத பகுதிகளுக்கு வாகனங்களில் கொண்டு சென்று கொட்டினர்.
இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக, இந்த மீன் மார்க்கெட்டில் தேங்கும் மீன் கழிவுகளை வியாபாரிகள் அங்கேயே விட்டுச் செல்கின்றனர். இதன் மூலம் வெளியேறும் துர்நாற்றத்தால் மீன் மார்க்கெட்டிற்கு அருகே குடியிருக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இது பற்றி அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதனை கண்டித்து, விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். மக்களின் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து நகராட்சி நிர்வாகிகள் தேங்கிய மீன் கழிவுகளை அகற்றுவதோடு, வெளிப்பகுதிகளில் கழிவுகளை கொட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

