/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிலாளியை தாக்கிய மெக்கானிக் கைது
/
தொழிலாளியை தாக்கிய மெக்கானிக் கைது
ADDED : மார் 15, 2025 06:38 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் தொழிலாளியை தாக்கிய மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த மங்களபுரத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் அன்புபிரியன், 26; கூலித் தொழிலாளி.
இவர், நேற்று முன்தினம் மதியம் விழுப்புரம் நாப்பாளை தெரு பகுதியில் நடந்து வந்தவர், பைக்கில் வந்த கீழ்ப்பெரும்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்த மெக்கானிக் அஜித்குமார், 28; என்பரிடம் லிப்ட் கேட்டு சென்றார்.
பைக்கில் அமர்ந்து வந்தவர், பொதுவாக திட்டியபடி வந்த அன்புபிரியனை, அஜித்குமார் தன்னைத் தான் திட்டுவதாக நினைத்து, கீழே இறக்கிவிட்டு இரும்பு பைப்பால் தாக்கினார். படுகாயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, அஜித்குமாரை கைது செய்தனர்.