/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்தியஸ்த சார்பு மையம் விழிப்புணர்வு முகாம்
/
மத்தியஸ்த சார்பு மையம் விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூலை 27, 2024 02:04 AM

மரக்காணம்: மரக்காணம் அடுத்த வெள்ளக்குளத்தில் வி.சி.டி.எஸ். மற்றும் திண்டிவனம் மத்தியஸ்த சார்பு மையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. மரக்காணம் தாலுக்கா வெள்ளகுளம் கிராமத்தில் உள்ள வி.சி.டி.எஸ்., மற்றும் திண்டிவனம் மத்தியஸ்த சார்புமையம் இணைந்து விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது. திண்டிவனம் மத்தியஸ்த சார்பு மையம் கூடுதல் சார்பு நீதிபதி தனம் தலைமை தாங்கி, அன்றாட வாழ்வியல் குறித்து பேசினார். வழக்கறிஞர் கிருபாகரன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பாலச்சந்திரன் வரவேற்றார்.
விழுப்புரம் நிரந்தர மக்கள் நீதி மன்றம், மத்தியஸ்த நீதிபதி தலைவர் ரஹ்மான், சமரசத்தின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். திண்டிவனம் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி மொஹமத்பாரூக் நீதிமன்றங்களில் சமரச நடைமுறைகள் கூறித்து பேசினார். வழக்கறிஞர் பாலசுப்பிமணியன், விழிப்புணர்வு நாடகம் நடந்தது. வெள்ளகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டனர். ். வி.சி.டி.எஸ்., திட்டமேலாளர் ஜோஸ்பின் பவித்ரா தேவி நன்றி கூறினார்.