/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கள்ளப்புலியூரில் மருத்துவ முகாம்
/
கள்ளப்புலியூரில் மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 30, 2024 11:45 PM

செஞ்சி : வல்லம் அடுத்த கள்ளப்புலியூர் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவையொட்டி வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
வல்லம் ஒன்றிய சேர் மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் இந்து மதி, ஊராட்சி தலைவர் தனசேகரன் முன்னிலை வகித்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சந்தோஷ் குமார் வரவேற்றார். சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் திட்டம் குறித்து விளக்கி பேசினார்.
அமைச்சர் மஸ்தான் முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில், பொது மருத்துவம், ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள், நீரிழிவு, இரைப்பை, குடல், மனநோய், காது, மூக்கு, தொண்டை சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் பரிசோதனைகளை செய்து சிகிச்சையும், ஆலேசனையும் வழங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் அணி அமைப்பாளர் தமிழரசன் மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

