/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில்வே மேம்பாலத்தில் அச்சுறுத்தும் முள் செடிகள்
/
ரயில்வே மேம்பாலத்தில் அச்சுறுத்தும் முள் செடிகள்
ADDED : ஜூன் 16, 2024 10:39 PM

விழுப்புரம் : விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில் முள் செடிகள் நீண்டு வளர்ந்து சாலையில் படர்ந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.
விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோடு ரயில்வே மேம்பாலம் பகுதியில், இடதுபுறமாக காலியாக உள்ள இடங்களில் முள் மரங்கள், செடிகள் வெட்டாமல் பராமரிப்பின்றி உள்ளது.
முள் மரங்கள், செடிகள் உயரமாக வளர்ந்தும், மேம்பாலத்தின் மீது தடுப்பு கட்டைகளை தாண்டி சாலையில் ஆக்கிரமித்து நீட்டிக் கொண்டிருக்கின்றன.
இதனால், வாகன ஓட்டிகள் இடதுபுறமாக வரும்போது, முள் செடிகள் உரசி கண்களை பதம் பார்க்கிறது. நீண்டகாலமாக ரயில்வே பாலத்தின் சுற்றுப் பகுதிகள் பராமரிக்கப்படாமல் கிடப்பதால், புதர்கள் மண்டியுள்ளது.
காற்று வீசும்போது, முள் செடி தங்கள் மீது படாமல் இருக்க வாகன ஓட்டிகள் சட்டென திருப்பும்போது விபத்து ஏற்படுகிறது.
பெரும் விபத்து ஏற்படும் முன் மேம்பாலத்தின் மீது படர்ந்துள்ள முள் செடிகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.