ADDED : ஆக 30, 2024 12:07 AM

தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்
வானுார்: கிளியனுாரில் நடந்த ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்திற்கு, அவைத் தலைவர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். மாநில ஆதி திராவிட நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ராஜூ வரவேற்றார். மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை கிளைகள் தோறும் கொண்டாடுவது. சென்னையில் நடக்கும் முப்பெரும் விழாவில் திரளாக பங்கேற்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உயிர்காக்கும் சிகிச்சை குறித்த பயிற்சி
விழுப்புரம்: இந்திய மருத்துவ சங்கம் சார்பில் போலீசாருக்கு முதலுதவி சிகிச்சை, உயிர்காக்கும் சிகிச்சைகள் குறித்த பயிற்சி வகுப்பு விழுப்புரத்தில் நடந்தது. டி.எஸ்.பி., பிரதீப்குமார் தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் தங்கராஜ், பொருளாளர் திருமாவளவன், செயலாளர் சவுந்தரராஜன், டாக்டர் சரண்யா முதலுதவி சிகிச்சை அளிக்கும் முறைகள், உயிர் காக்கும் சிகிச்சைகள் குறித்து பயிற்சி அளித்தனர். பயிற்சியில், 40 இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து மா.கம்யூ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் குமார், ராஜேந்திரன், மூர்த்தி, வட்ட செயலாளர் கண்ணப்பன் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வால் மக்கள் வாழ்க்கை, சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம், சிறுதொழில்கள் சீரழிவதை தடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பா.ம.க., நிர்வாகி தேர்வு
மயிலம்: மயிலம் தொகுதிக்குட்பட்ட வல்லம், ஒலக்கூர், மயிலம் ஒன்றியத்தில் பா.ம.க., வட்டார தலைவர்கள், செயலாளர்கள், மகளிர் அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் புதியதாக தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, பா.ம.க., மாவட்ட செயலார் சிவக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசினார்.
மாவட்ட தலைவர் புகழேந்தி தலைமை செயற்குழு உறுப்பினர் செங்கேணி முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் கோபால் வரவேற்றார். நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், புதிய நிர்வாகிகளுக்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கட்சி தலைமையிடம் நிர்வாகிகள் வழங்கினர்.