/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பயணியர் நிழற்குடை, அங்கன்வாடி கட்டடம்: அமைச்சர் திறந்து வைப்பு
/
பயணியர் நிழற்குடை, அங்கன்வாடி கட்டடம்: அமைச்சர் திறந்து வைப்பு
பயணியர் நிழற்குடை, அங்கன்வாடி கட்டடம்: அமைச்சர் திறந்து வைப்பு
பயணியர் நிழற்குடை, அங்கன்வாடி கட்டடம்: அமைச்சர் திறந்து வைப்பு
ADDED : மார் 06, 2025 03:27 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே 27 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடங்கள் மற்றும் சாலையை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.
விழாவிற்கு ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மேன் ஓம்சிவ சக்திவேல், விவசாய அணி விஸ்வநாதன், இலக்கிய அணி ராஜ் மோகன், மாவட்ட பிரதிநிதி சடகோபன், மோகன்ராஜ், ஒன்றிய அவைத் தலைவர் மோகன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைச் செயலாளர்கள் ஏழுமலை, சுதா சீனிவாசன், காசி விசுவநாதன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, ஊராட்சி தலைவர் கவுரி கோவிந்தராஜ், துணைத் தலைவர் உமா நாவப்பன் வரவேற்றனர்.
விழாவில், மனக்குப்பம் கிராமத்தில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை, டி.எடப்பாளையத்தில் 14 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம் மற்றும் அமாவாசைபாளையத்தில் 5 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை ஆகியவற்றை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.
ஊராட்சித் தலைவர் அப்துல்லா, டாக்டர் அக்பர் அலி உட்பட பலர் பங்கேற்றனர்.