/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை விரிவாக்க பணி அமைச்சர் துவக்கி வைப்பு
/
சாலை விரிவாக்க பணி அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : பிப் 27, 2025 07:34 AM

மயிலம்; மயிலம் அருகே சாலை விரிவாக்க பணியை அமைச்சர் துவக்கி வைத்தார்.
முதலமைச்சர் சாலை மேம்பாடு திட்டத்தில் வெள்ளிமேடுபேட்டை - புதுச்சேரி சாலையில் 5 கி.மீ, துாரத்திற்குரூ.32.50 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இதற்கான பூமி பூஜை மயிலம் அடுத்த தழுதாளி கிராமத்தில் நடந்தது. விழாவில் அமைச்சர் பொன்முடி, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் தலைமை தாங்கி சாலை விரிவாக்க பணியை துவக்கி வைத்தனர். மஸ்தான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கிருஷ்ணன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், சப் கலெக்டர் திவ்யன் ஷீ நிகம், உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்கள் கோகுலகிருஷ்ணன், தீனதயாளன், ஒன்றிய சேர்மன்கள் யோகேஸ்வரி மணிமாறன், சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

