/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி அமைச்சர் மஸ்தான் ஆசை
/
3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி அமைச்சர் மஸ்தான் ஆசை
3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி அமைச்சர் மஸ்தான் ஆசை
3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி அமைச்சர் மஸ்தான் ஆசை
ADDED : மார் 21, 2024 11:58 AM

செஞ்சி : 'ஆரணி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது நிச்சயம்' என அமைச்சர் மஸ்தான் பேசினார்.
செஞ்சி சட்டசபை தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் நடந்தது. வந்தவாசி எம்.,எல்.ஏ., அம்பேத்கர் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், நெடுஞ்செழியன் வரவேற்றனர்.
அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி, வேட்பாளர் தரணிவேந்தனை அறிமுகம் செய்து பேசுகையில், 'ஆரணி தொகுதியில் விழுப்புரம் மாவட்டத்தில் 2 தொகுதிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தொகுதிகளும் அடங்கியுள்ளன.
இங்குள்ள 2 தொகுதியில் 1 லட்சம் ஓட்டு வித்தியாசம், அமைச்சர் வேலுவின் களப்பணியில் உள்ள திருவண்ணாமலையில் 2 லட்சம் ஓட்டு வித்தியாசம் என 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும்' என்றார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.,ஏ., செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், பேரூராட்சி தலைவர் மோக்தியார், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் கணேசன், துணைச் சேர்மன் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

