/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேக்கம் வடிகால் அமைப்பது குறித்து அமைச்சர் நேரு ஆய்வு
/
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேக்கம் வடிகால் அமைப்பது குறித்து அமைச்சர் நேரு ஆய்வு
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேக்கம் வடிகால் அமைப்பது குறித்து அமைச்சர் நேரு ஆய்வு
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேக்கம் வடிகால் அமைப்பது குறித்து அமைச்சர் நேரு ஆய்வு
ADDED : ஆக 15, 2024 05:33 AM

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்குவதை யொட்டி, மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, அமைச்சர் பொன்முடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு முன்பாக அமைச்சர் நேரு கூறியதாவது,
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இயல்பை விட அதிக கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், புதிய பஸ்நிலையத்தில் தேங்கிய மழைநீர் உடனே மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையால் வெளியேற்றப்பட்டது.
இங்கு மழைநீர் தேங்காத வகையில் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி தருமாறு, முதல்வரிடம், அமைச்சர் பொன்முடி கோரிக்கை வைத்தார். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
பின் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் செல்லும் மருதுார் ஏரி வாய்க்காலை சீரமைக்கவும், பழைய மின்மோட்டாரை மாற்றி அதிக திறன் கொண்ட புதிய மின் மோட்டார் அமைக்கவும் ஆலோசனை செய்யப்பட்டது.
அமைச்சர் பொன்முடி, இந்த பஸ் நிலையம் தாழ்வான பகுதியாக உள்ளதால் உயரப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, துறை சார்ந்த அலுவலர்களிடம் திட்ட மதிப்பீடு தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு தயார் செய்தவுடன், முதல்வரிடம் ஒப்புதல் பெற்று ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் செய்யப்படும்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட்ட உத்தரவிட்டுள்ளதோடு, விரைவில் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்காத வகையில் உரிய கட்டமைப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என கூறினார். முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் ஜெயச்சந்திரன், நகர்மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஸ்ரீபிரியா உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.