/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்கள் நலத்திட்டங்கள் தொடர தி.மு.க.,வை ஆதரியுங்கள் அமைச்சர் உதயநிதி பேச்சு
/
மக்கள் நலத்திட்டங்கள் தொடர தி.மு.க.,வை ஆதரியுங்கள் அமைச்சர் உதயநிதி பேச்சு
மக்கள் நலத்திட்டங்கள் தொடர தி.மு.க.,வை ஆதரியுங்கள் அமைச்சர் உதயநிதி பேச்சு
மக்கள் நலத்திட்டங்கள் தொடர தி.மு.க.,வை ஆதரியுங்கள் அமைச்சர் உதயநிதி பேச்சு
ADDED : ஜூலை 08, 2024 05:03 AM

விக்கிரவாண்டி: 'விக்கிரவாண்டி தொகுதியில் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து நடைபெற தி.மு.க.,வை ஆதரியுங்கள்' என அமைச்சர் உதயநிதி பேசினார்.
தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து திருவாமாத்துார், காணை, பனமலைப்பேட்டை, அன்னியூர் ஆகிய இடங்களில் ஓட்டு சேகரித்து அவர் பேசியதாவது:
கடந்த சட்டசபை தேர்தலில் புகழேந்தியை 10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துள்ளீர்கள். கடந்த 3 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு பணியையும் பார்த்து பார்த்து செய்து வருகிறோம்.
தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல், பால் விலைகள் குறைக்கப்பட்டது. விடியல் பயணம் திட்டத்தில் 8 கோடி பேர் பயணம் மேற் கொண்டுள்ளனர்.
புதுமைப்பெண் திட்டத்தில் இம்மாவட்டத்தில் 10 ஆயிரம் மாணவிகள் கல்வி ஊக்கத்தொகையாக மாதம் 1000 ரூபாய் பெறுகின்றனர். இப்பகுதியில் நந்தன் கால்வாய் பணிகள் 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
இடைத்தேர்தல் வாக்குறுதிகளாக காணை ஒன்றியத்தில் 3 கோடியே 18 லட்சம் மதிப்பில் மகளிர் பள்ளி விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. வி.சாலையில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீதிமன்ற வளாக கட்டடம் விரைவில் கட்டி முடிக்கப்படும்.
முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவமனை எதிரே 62 கோடி ரூபாய் மதிப்பில் காட்டப்பட்டு வரும் உயர் மட்ட பாலம் பணி விரைந்து முடிக்கப்படும். சாத்தனுார் அணையின் உபரி நீர் பனைமலை பேட்டை ஏரியில் சேர்க்கின்ற வகையில் நந்தன் கால்வாய் திட்டத்தை விரைவில் முதல்வர் துவக்கி வைப்பார். இதுதான் வாக்குறுதிகள்.
அதே போன்று செய்துள்ள சாதனைகளாக அன்னியூர் ஊராட்சியில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தீயணைப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளர்களுக்கு புதிய காத்திருப்போர் கூடம் கட்டப்பட்டுள்ளது.
எண்ணாயிரத்தில் புதிய கால்நடை மருத்துவமனை, அனைத்து வசதிகளுடன் இருளர் குடியிருப்பு, வேளாண்மை கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்னும் எண்ணற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோன்று பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து நடைபெற அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.
அமைச்சர்கள் பொன்முடி, பெரியசாமி, சக்கரபாணி, மகேஷ், வேலு, நேரு, ஜெகத்ரட்சகன் எம்.பி., மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, பொருளாளர் ஜனகராஜ், துணைச் செயலாளர் இளந்திரையன், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், பழனி தொகுதி எம்.எல்.ஏ., செந்தில், மாவட்ட செயலாளர் மதியழகன் பங்கேற்றனர்.