/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., வேட்பாளருக்கு அமைச்சர் ஓட்டு சேகரிப்பு
/
தி.மு.க., வேட்பாளருக்கு அமைச்சர் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஜூன் 25, 2024 07:23 AM

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் தி.மு.க., வேட்பாளர் சிவாவுக்கு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஓட்டு சேகரித்தார்.
விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியான திருநந்திபுரம், பிடாரிப்பட்டு, செ.குன்னத்துார் ஆகிய இடங்களில் நடந்த பிரசாரத்தில் மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி முன்னிலை வகித்தார்.
கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வேட்பாளர் சிவாவை ஆதரித்து பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு எண்ணற்ற பல திட்டங்களை பள்ளி மாணவர்களுக்கும், பெண்களுக்கும் செயல்படுத்தி தந்துள்ளார். இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி, மகளிர் உதவித் தொகை போன்றவற்றை நிறைவேற்றிக் கொடுத்துள்ளார்.
வேட்பாளர் சிவா இந்த தொகுதிக்கு மேலும் பல திட்டங்களை செய்து தர மறக்காமல் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு அளித்து லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்.
இவ்வாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய துணை சேர்மன் ஜீவிதா ரவி, ஆவின் சேர்மன் தினகரன், கண்காணிப்பு குழு எத்திராசன், கலை இலக்கிய அணி கலைச்செல்வன்,வி.சி., மாவட்ட செயலாளர் திலீபன், ஒன்றிய செயலாளர்கள் வெற்றிவேந்தன், ஜெயச்சந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், கணேசன், ஜெயபால், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், கிளைச் செயலாளர்கள் சீனுவாசலு, சுதா, துரை சின்னதம்பி உட்பட பலர் பங்கேற்றனர்.