/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'தேசிய கல்விக் கொள்கை குறித்து அமைச்சர் கூறிய கருத்தை திரும்ப வேண்டும்' பா.ஜ., முன்னாள் மாநில துணைத் தலைவர் பேட்டி

ADDED : செப் 10, 2024 12:25 AM
விழுப்புரம் : 'தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு திணிப்பதாக தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கூறியதை திரும்பப் பெற வேண்டும்' என பா.ஜ., மாநில முன்னாள் துணைத் தலைவர் கவிதாசன் கூறினார்.
விழுப்புரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் 1 லட்சம் உறுப்பினர்களை பா.ஜ.,வில் சேர்க்கும் பணிகள் நடக்கிறது. பா.ஜ., தனது முழு கட்டமைப்பை உறுதி செய்ய தேசிய அளவில் 23 கோடி உறுப்பினரும், தமிழ்நாட்டில் 1 கோடி உறுப்பினர் எண்ணிக்கையை எட்டுவதற்காக அனைத்து அரசியல் பணிகளை ஒத்திவைத்து முழுநேரமாக உறுப்பினர் சேர்க்கையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
தமிழகத்தில் கல்வி அமைச்சர் மகேஷ் தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திணிப்பதாக கூறியுள்ளார். சர்வ சிக்ஷா அபியான், சங்கர சிக்ஷா அபியான், பிரதம மந்திரி ஸ்ரீ ஆகிய மத்திய அரசு சார்ந்த கல்வி திட்டங்கள் உள்ளது. புதிய கல்வி கொள்கை என்பது வேறு, இந்த திட்டங்கள் வேறு.
இந்த திட்டத்திற்கு, புதிய தேசிய கல்வி கொள்கை திட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இங்குள்ள கல்வி அமைச்சர் தேசிய கல்வி கொள்கையை திணிப்பதாக கூறுகிறார். இந்த கருத்தை திரும்ப பெற வேண்டும். மாணவர்களின் ஆர்வத்தை தடுக்கும் உரிமை இவர்களுக்கு இல்லை.
இவ்வாறு கவிதாசன் கூறினார்.
தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன், ஓ.பி.சி., அணி பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, பொதுச் செயலாளர்கள் ஆனந்த், முரளி, சதாசிவம் உடனிருந்தனர்.