தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ காணாமல் போன முதியவர் கிணற்றில் சடலமாக மீட்பு

காணாமல் போன முதியவர் கிணற்றில் சடலமாக மீட்பு

காணாமல் போன முதியவர் கிணற்றில் சடலமாக மீட்பு


ADDED : மே 09, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 05:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வானுார்: வானுார் அருகே காணாமல் போன முதியவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

வானுார் அடுத்த எறையூர் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் மாரி, 65; இவர் திருவண்டார்கோவிலில் உள்ள தனியார் கொசுவர்த்தி கம்பெனியில் வேலை செய்து வந்தவர், சற்று மனநிலை பாதிக்கப்பட்டதால் வேலையை விட்டு நின்று, வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது மனைவி கோவிந்தம்மாள் அளித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ரகுராமன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் மாரியின் சடலம் கிடந்துள்ளது.

தகவலறிந்த வானுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு மாரி இறந்ததற்கான காரணம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us