/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மார்க்கெட் கமிட்டியில் எம்.எல்.ஏ., ஆய்வு
/
மார்க்கெட் கமிட்டியில் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : மார் 15, 2025 06:51 AM

செஞ்சி: திறப்பு விழா செய்தும் செயல்படாமல் மூடிக் கிடக்கும் மேல்சித்தாமூர் மார்க்கெட் கமிட்டியில் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
செஞ்சி அடுத்த மேல்சித்தாமூரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி கட்டப்பட்ட மார்க்கெட் கமிட்டியை நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த ஆண்டு மத்தியில் திறந்தனர். ஆனால், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மார்க்கெட் கமிட்டிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடையை வாகனங்கள் கடந்து செல்ல பாலம் அமைக்கவில்லை. இதனால் மார்க்கெட் கமிட்டியில் கொள்முதல் செய்யாமல் மூடியுள்ளனர்.
இந்த மார்க்கெட் கமிட்டியில் மயிலம் தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ., சிவக்குமார் திடீர் ஆய்வு செய்தார். மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் சந்துரு, செஞ்சி மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாள வினோத், தாசில்தார் ஏழுமலை. ஆர்.ஐ., கீதா. வி.ஏ.ஓ., சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.