/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கடலாடிதாங்கலில் மொபைல் ரேஷன் கடை
/
கடலாடிதாங்கலில் மொபைல் ரேஷன் கடை
ADDED : மார் 15, 2025 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அடுத்த வேலந்தாங்கல் ஊராட்சி, கடலாடிதாங்கல் கிராமத்தில் செம்மேடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மொபைல் ரேஷன் கடை துவக்க விழா நடந்தது.
ஒன்றிய சேர்மேன் விஜயகுமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர் அன்னம்மாள் ஆபிரகாம், ஊராட்சி தலைவர் மார்ட்டின் புஷ்பராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க செயலாளர் லோகநாதன் வரவேற்றார்.
மஸ்தான் எம்.எல்.ஏ., மொபைல் ரேஷன் கடையை திறந்து வைத்து, பொருட்கள் வினியோகத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை மற்றும் கிளை நிர்வாகிகள். உறுப்பினர்கள் பங்கேற்றனர்.